Vimarsagan Media

Home » Malaysia » தலைநகர் முழுவதும் மேற்கூரைகளுடன் கூடிய நடைபாதைகளை அமைக்கும் திட்டம், RM55 மில்லியன் செலவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளது.

தலைநகர் முழுவதும் மேற்கூரைகளுடன் கூடிய நடைபாதைகளை அமைக்கும் திட்டம், RM55 மில்லியன் செலவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளது.

பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேசஅமைச்சர் ஹன்னா யோ, கோலாலம்பூர் மாநகராட்சியின் (DBKL) செயல்பாட்டுச் செலவு ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தலைநகர் முழுவதும் மொத்தம் 22 கிலோமீட்டர் (கி.மீ) நீளத்திற்கு மேற்கூரைகளுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். “கோலாலம்பூர் மாநகராட்சியின் (DBKL) செயல்பாட்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் தலா 2 கி.மீ நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும்; இதற்காக மொத்தம் 22 கி.மீ நடைபாதைகள் உருவாக்கப் படவுள்ளன.

“RM55 மில்லியன் ஒதுக்கீடு கொண்ட இத்திட்டம், அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று இன்று மக்களவையில் 2027-ஆம் ஆண்டுக்கான வழங்கல் மசோதா மீதான கொள்கை அளவிலான விவாதத்தின் நிறைவு அமர்வில் அவர் குறிப்பிட்டார்.

2023-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்தே, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஹன்னா தெரிவித்தார்.

Scroll to Top