நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரப் பகுதியில் இரு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது, அவற்றின் இறக்கைகள் காற்றில் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில், இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடம் மற்றும் நேரம். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள சோலுகும்பே மாவட்டத்தின் பெரிச்சே என்ற இடத்தில் உள்ள ஹெலிபேடில், இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
‘ஃபிஷ்டெயில் ஏர்’ மற்றும் ‘ஏர் டைனாஸ்டி’ ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் பெரிச்சே ஹெலிபேடில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றுள்ளன.
அப்போது, எதிர்பாராதவிதமாக இரு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகளும் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக்கொண்டன.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




