நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாவலர் ஒருவர், கடந்த மாதம் ஹோட்டல் ஒன்றில் தனது காதலியும் தொழிற்சாலை ஊழியருமான பெண்ணைக் கொலை செய்ததாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
டாங் வாங்கி ( காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து, காவல்துறையினரின் பாதுகாப்போடு 44 வயதான தமாங் பால் பகதூர் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அக்டோபர் 9-ஆம் தேதி இரவு 10.46 மணிக்கும், அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 2.34 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஜாலான் ஹாங் கஸ்தூரி பகுதியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில், 24 வயதான தமாங் சந்தியா (Tamang Sandhya) என்பவரைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படி தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றக் கூண்டில் நின்ற பால் பகதூர், தனக்கு எதிரான குற்றச்சாட்டு மலாய் மொழியில் வாசிக்கப்பட்டதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.




