Vimarsagan Media

Breaking News

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், தமிழ்ப்பெண் நித்யா ராமன் முன்னிலையில் இருக்கிறார்.ஜனநாயக கட்சியை சேர்ந்த சோஷியலிஸ்ட் என்று அறியப்படும் நித்யா ராமன், 45,

பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றங்களுக்காக இதுவரை 17,000-க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன; மேலும், 2,000 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டு உள்ளன.

மலேசியச் சொத்து மேம்பாட்டு நிறுவனமான R&F Development வீடுகளைக் கட்டிமுடிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்காகச் சுமார் 3.3 மில்லியன் வெள்ளி இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஜொகூர் பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மக்கள் என் மீது சலிப்படைந்தால், நான் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டின் பிரதமராவேன் என்று வேடிக்கையாகக் (Joke) கூறியுள்ளார்

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தலில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 5 கருப்பின ஆளுநர்கள் பதவியேற்க உள்ளனர்.

Home » World » அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், தமிழ்ப்பெண் நித்யா ராமன் முன்னிலையில் இருக்கிறார்.ஜனநாயக கட்சியை சேர்ந்த சோஷியலிஸ்ட் என்று அறியப்படும் நித்யா ராமன், 45,

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், தமிழ்ப்பெண் நித்யா ராமன் முன்னிலையில் இருக்கிறார்.ஜனநாயக கட்சியை சேர்ந்த சோஷியலிஸ்ட் என்று அறியப்படும் நித்யா ராமன், 45,

முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராக பணியாற்றினார்கேரள தமிழர் குடும்பத்தில் பிறந்த நித்யாவுக்கு 6 வயதாக இருக்கும்போது அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹார்வார்டு பல்கலையில் பட்டம் பெற்ற அவர், மாசேசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.படித்து முடித்து இந்தியா திரும்பிய அவர், சென்னையில் நகர நிர்வாகம் தொடர்பான நிறுவனத்தை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினார்.

மீண்டும் அமெரிக்காவுக்கு சென்ற நித்யா, 2013ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறினார். தற்போதைய மேயரும், நீண்ட காலமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செல்வாக்குடன் இருப்பவருமான கரன் பாஸ் என்பவரை காட்டிலும் நித்யாவின் ஓட்டு முன்னணி வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஓட்டு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை. எனினும், முன்னணி ஊடகங்கள் அனைத்தும் நித்யா ராமன் உறுதியாக வெற்றி பெறுவார் என்று செய்தி வெளியிட்டு வருகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம், வரும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. மேயராக தேர்வு செய்யப்பட்டால், நித்யா ராமன் தலைமையில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Scroll to Top