Vimarsagan Media

Breaking News

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், தமிழ்ப்பெண் நித்யா ராமன் முன்னிலையில் இருக்கிறார்.ஜனநாயக கட்சியை சேர்ந்த சோஷியலிஸ்ட் என்று அறியப்படும் நித்யா ராமன், 45,

பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றங்களுக்காக இதுவரை 17,000-க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன; மேலும், 2,000 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டு உள்ளன.

மலேசியச் சொத்து மேம்பாட்டு நிறுவனமான R&F Development வீடுகளைக் கட்டிமுடிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்காகச் சுமார் 3.3 மில்லியன் வெள்ளி இழப்பீடு வழங்கவேண்டும் என்று ஜொகூர் பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மக்கள் என் மீது சலிப்படைந்தால், நான் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டின் பிரதமராவேன் என்று வேடிக்கையாகக் (Joke) கூறியுள்ளார்

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தலில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 5 கருப்பின ஆளுநர்கள் பதவியேற்க உள்ளனர்.

Home » Malaysia » பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றங்களுக்காக இதுவரை 17,000-க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன; மேலும், 2,000 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டு உள்ளன.

பொது இடங்களில் குப்பைகளை வீசிய குற்றங்களுக்காக இதுவரை 17,000-க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன; மேலும், 2,000 குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டு உள்ளன.

நாட்டைச் சுத்தமாக வைத்திருக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ரோஸ்லான் கூலிம்-பந்தார் பாரு) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், “மலேசியர்கள் அனைவரும் சிறந்த வாழ்க்கை தரத்தை அனுபவிக்கும் வகையில், நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்பு கழகம் கடந்த ஆண்டு 3,600 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்களை மூடியுள்ளதாகவும், 1,500 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“கடந்த மூன்று ஆண்டுகளில், நாங்கள் 6,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்களை வெற்றிகரமாக மூடியுள்ளோம்” என்று அவர் கூறினார்.

Scroll to Top