R&F Princess Cove எனும் தனியார் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்தில் 84 வீடுகளை வாங்கியவர்களில் சிங்கப்பூரர்களும் அடங்குவர்அந்த வீட்டுத்திட்டம் உட்லண்ட்ஸ் நிலச் சோதனைச் சாவடிக்கு அருகில் அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விதிகளை நிறுவனம் மீறியதாக நீதிமன்றம் சொன்னது.
நிறுவனம் முதற்கட்டத் திட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானம் முடிவதற்கு முன்பே வீடுகளை வாங்கிய சிலர் சாவியைப் பெற்றுக்கொண்டனர்.அப்போது பொது வசதிகள் உட்பட திட்டத்தின் மற்ற பகுதிகளும்முழுமையடையவில்லை.எனினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக R&F நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.ஆதாரம் CNA




