Vimarsagan Media

Home » Malaysia » காதலர் தினத்தன்று காணாமல் போன சிறுமி திரும்பினார்- காதலன் கைது

காதலர் தினத்தன்று காணாமல் போன சிறுமி திரும்பினார்- காதலன் கைது

காதலர் தினத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 15 வயது சிறுமி, பாவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் தனது காதலனின் வீட்டில் தங்கியிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப் பட்டது.

காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 17 அன்று மாலை 5.30 மணியளவில் அந்தப் பெண் படவானில் உள்ள தனது குடும்ப வீட்டிற்குத் திரும்பியதாக பாவ் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் ஹைடே ஏ. ரஹ்மான் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணை சரவாக் பொது மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர், அங்கு பாதிக்கப்பட்டவரின் அந்தரங்கப் உறுப்பில் பாலியியல் பலாத்கார அறிகுறிகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தனது காதலனால் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி மற்றொரு காவல் புகாரை அளித்ததாக அவர் கூறினார்.

அந்த புகாரின் பேரில், விசாரணைக்கு உதவுவதற்காக 19 வயது காதலனை போலீசார் கைது செய்தனர்.

Scroll to Top