கடனை அங்கீகரிக்க வங்கியின் குழும நிர்வாக இயக்குநருக்கு RM8 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் முன்னாள் தொலைத்தொடர்பு நிறுவன இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
MACC வட்டாரத்தின்படி, 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று மதியம் 12.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார். “சந்தேக நபர் 2012 ஆம் ஆண்டு பெறுநருக்கு லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. பைபர் ஆப்டிக் திட்டத்திற்கு நிதியளிக்க RM400 மில்லியன் கடனுக்கான நிபந்தனை களை நிறைவேற்ற போலி விவரங்கள் அடங்கிய கூட்டு நிறைவு உத்தரவாத த்தையும் அவர் சமர்ப்பித்தார்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
MACC சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் மூத்த இயக்குனர் ஜம்ரி ஜைனுல் அபிடின் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.சந்தேக நபர் மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது




