நம்மில் பலர் குறிப்பாக ஆண்கள் சாப்பிட்டு முடித்ததும் அப்படியே எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து அலைபேசியைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு சிலர் சாப்பிட்டு முடித்த அடுத்த நிமிடம், தங்கள் தட்டையும் கைவசம் இருக்கும் பாத்திரங்களையும் கழுவிச் சுத்தம் செய்துவிடுவார்கள். இது ஒரு சாதாரண வீட்டு வேலை போலத் தெரிந்தாலும், இதற்குப் பின்னால் ஒரு ஆச்சரியமான உளவியல் ஒளிந்திருக்கிறது. தள்ளிப்போடும் பழக்கம் இல்லாதவர்கள்:
“நாளை செய்யலாம்”, “அப்புறம் பார்த்துக்கலாம்” என்பது இவர்களது அகராதியிலேயே இருக்காது.
ஒரு வேலையை முடிக்காமல் இருந்தால், அது மனதின் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டே இருக்கும் என்பதை இவர்கள் அறிவார்கள். இதனால், ஒரு செயலை உடனே முடித்துவிட்டு அடுத்த வேலையை நிம்மதியாகத் தொடங்கு வார்கள்.
இவர்களின் இந்தச் சுறுசுறுப்பு, அலுவலகப் பணிகளிலும் இவர்களை முன்னணியில் வைக்கும்.நல்ல முன்னோடி. அமைதியான மனநிலை உடையவர் என்கிறது. அப்புறம் என்ன சில வேளைகளில் வீட்டில் உள்ள பாத்திரங்களையும் சற்று கழுவலாமே…!




