நேற்று காலை பொந்தியான், காயு அரா பசோங் அருகிலுள்ள தஞ்சோங் அயர் ஹித்தாமில் தனது வளர்ப்பு மகனுடன் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்த நபர் நேற்றிரவு இறந்து கிடந்தார்.
பொந்திய மாவட்ட காவல்துறைத் தலைமை கண்காணிப்பாளர் அட்ஸ்ரத் மியான் ஹுசைன் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பொந்தியன் பெசார் நோக்கிச் செல்லும் இடது கரையில் உள்ள நீர் மேற்பரப்பில் 55 வயதான டான் சியாங் பூக்கின் உடல் மிதந்து கொண்டி ருந்ததாகக் கூறினார்.
பலியானவரின் உடலை உள்ளூர்வாசி யான முகமது அஸ்வான் அப்துல் அஜீஸ் கண்டுபிடித்தார், அவர் தனது நண்பர் களுடன் சேர்ந்து தேடுதல் நடவடிக்கை யில் உதவினார்.




