குர்ஆனை மிதித்ததாகக் கூறப்படும் 21 வயது பல்கலைக்கழக மாணவன் மீது சட்டத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று டிஏபியின் ஆர்எஸ்என் ரேயர் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசத்தின் பல இன அமைப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு மலேசியரும் மற்றொருவரின் மதத்தை கேலி செய்வது தவறு என்று ஜெலுத்தோங் எம்.பி. கூறினார்.
மலேசியாவில், ஒவ்வொரு மதமும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களாலும் மதிக்கப்பட வேண்டும். எந்தவொரு மதத்தையும், குறிப்பாக மற்றொரு மதத்தை, கேலி செய்வது, அல்லது குறைத்து மதிப்பிடுவது தவறு என்றார்.




