ஆழி அருள் தாஸ் மூலம் மேடை நாடக உலகிற்கு அறிமுகமான பி. சத்தியபாமா தான் இவர். தனது 21 வயதில்,தன் விருப்பத் தேர்வை நயம் திறன் பட செய்து வந்தார். அன்றையமேடை நாடக உலகம் சற்று மாறுப் பட்டது.நானும் கலைத் துறையை விருப்பத் தேர்வாகத் செய்தேன். இதுபோன்ற தேர்வுக்கும்
பொழுதுபோக்கிற்கும் என் வயது ஒத்தப் பெண்கள் எட்டியும் பார்க்க மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ மேடை நாடகம் நடிப்பது பிடித்திருந்தது.அதன் விளைவாக தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்தேன்.1993 சிறந்த துணை நடிகையாக காம்மாவால் தேர்வும் செய்யப் பட்டேன். பின்னர் மலாய் ஸ்பானர் ஜெயா( spanar jaya) நாடகத்திலும் சிறு சிறு பாத்திரத்தில் தேர்வாகி நடித்தேன்.
வயசு இப்போது 83 ஆகிறது. ஞாபகச் சக்தி குறைந்துக் கொண்டே வருகிறது.தனிமையே மனசு நிரம்ப சூழ்ந்து கொள்கிறது அவ்வப்போது என்கிறார். குரல் சன்னமாக ஒலிக்கிறது. மகனின் இழப்பு எனக்கு மனப் பலத்தை இழக்கச் செய்து விட்டது ஒரு பக்கம் என்கிறார் இவர்.
வயோதிகம் பலருக்கு பல விதமான இன்னல்களை கொடுத்துக் கொண்டு தான் வருகின்றன. என்ன செய்ய..!




