Vimarsagan Media

Home » Malaysia » டோஹா- ஜெட்டா- மடீனா மார்ச் 4 ஆம் தேதி வரை நிறுத்தம்

டோஹா- ஜெட்டா- மடீனா மார்ச் 4 ஆம் தேதி வரை நிறுத்தம்

மலேசிய ஏர்லைன்ஸ் டோஹா, ஜெட்டா மற்றும் மடீனாவிற்குச் செல்லும் மற்றும் -புறப்படும் அனைத்து விமானங்களை யும் மார்ச் 4 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.

பிராந்திய பாதுகாப்பு முன்னேற்றங்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று அதன் தாய் நிறுவனமான மலேசியா ஏவியேஷன் குரூப் பெர்ஹாட் (MAG) தெரிவித்துள்ளது.

இருப்பினும், லண்டன் மற்றும் பாரிஸுக்குச் செல்லும் – புறப்படும் விமானங்கள் உட்பட மற்ற அனைத்து விமானங்களும் இந்த நேரத்தில் கால அட்டவணையில் உள்ளன என்று அது கூறியது.

“இந்த விமானங்கள் மாற்று விமானப் பாதைகளில் இயக்கப்படுகின்றன, பாதிக்கப்பட்ட மோதல் மண்டலத்திலி ருந்து நன்கு விலகி உள்ளன,” என்று MAG நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்து ள்ளது.

அதவுடன் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் மாற்று பயண ஏற்பாடு களுக்கு உதவுவதாகவும் MAG தெரிவித்துள்ளது

Scroll to Top