Vimarsagan Media

Home » Malaysia » மாணவியிடம் பாலியல் குற்றம் பள்ளி ஆசிரியர் கைது

மாணவியிடம் பாலியல் குற்றம் பள்ளி ஆசிரியர் கைது

கூச்சிங், பிந்தாங்கூரில் 39 வயது ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியிடம் பாலியல் குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் தாய், தனது மகள் ஒழுக்கக்கேடான செயல்களுக்கு ஆளானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மெராடோங் காவல்துறைத் தலைவர் டான்ஸ்லி மெரிங் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதாக தயக் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவி வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லாததை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்ததாக டான்ஸ்லி கூறினார். சம்பந்தப்பட்ட பள்ளி விசாரணை நடத்தி, கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தை குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது எனவும் இதன் காரணமாக தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் எனவும் தெரிவித்தார்.

Scroll to Top