அல்-குர்ஆனை அவமதித்து மிதித்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியா பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா (UMPSA) மாணவர் பல்கலைக்கழக விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்.
பல்கலைக்கழகத்திலிருந்து மாணவரை வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள தாகவும், பல்கலைக்கழகத்தின் தற்போதைய விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
“இந்த வழக்கு இப்போது போலீஸ் விவகாரம், எனவே நாங்கள் போலீஸ் விசாரணைக்காக காத்திருக்கிறோம். பல்கலைக்கழகமும் அதன் விதிகளின்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று நம்புகிறேன் என்றார்




