டாமன்சாரா டமாய் நிலையம் அருகே கேபிள் திருட்டு நடந்ததைத் தொடர்ந்து எம்ஆர்டி புத்ராஜெயா பாதையில் ரயில் சேவைகள் நேற்று அதிகாலையில் பாதிக்கப்பட்டன, முழுமையாக சீரமைக்க மூன்று நாட்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான பழுதுபார்க்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரேபிட் ரெயில் தெரிவித்துள்ளது.
“அமைப்பு பாதுகாப்பாகவும் நிலையான தாகவும் மீண்டும் செயல்படுவதை உறுதி செய்ய விரிவான பழுதுபார்க்கும் பணிகள் தேவை.
“சேவைகள் மூன்று நாட்களுக்குள் படிப்படியாக மீட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அது கூறியது.




