ஈரானின் உச்ச தலைவர் அயதொல கமேனி கொல்லப்பட்ட விவகாரம் அனைத்துலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சில நாடுகள் அவரின் மறைவிற்கு கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருந்தன.
ஆனால் இந்தியா அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காத்துவந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 5 நாள்கள் கழித்து கமேனியின் மறைவிற்கு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது.
டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அலி கமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா சார்பில் கையெழுத்திட்டு அந்நாட்டு தூதரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.




