Vimarsagan Media

Home » Malaysia » RM500,000 கொள்ளையடிக்க சதி 53 வயது மாது மீது குற்றச்சாட்டு

RM500,000 கொள்ளையடிக்க சதி 53 வயது மாது மீது குற்றச்சாட்டு

தனது கணவரிடமிருந்து RM500,000 கொள்ளையடிக்க சதி செய்ததாக 53 வயது பெண் ஒருவர் நேற்று ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பகுதியளவு உடல் முடங்கிப் போயிரு க்கும் 30 வயது முகமது ரஷீத் இஸ்மாயிலுடன் சேர்ந்து ஒரு கும்பல் கொள்ளை குற்றச்சாட்டை ஷமீம் பேகம் அப்துல் சையத் ஒப்புக்கொண்டார்.

நீதிபதி சே வான் ஜைதி சே வான் இப்ராஹிம் முன் அவர்களுக்கு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதாக பெரித்த ஹரியான் தெரிவித்தது

ஜொகூரில் உள்ள பாசிர் கூடாங் வர்த்தக மைய வங்கிக்குப் பின்னால் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் பிப்ரவரி 24 அன்று நண்பகல் சுமார் மதியம் இந்த குற்றத்தைச் செய்ததாக இருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

அவர்கள் மீது கும்பல் கொள்ளை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395 இன் கீழ், அதே சட்டத்தின் பிரிவு 120B(1) உடன் சேர்த்து கடுமையான குற்றத்தைச் செய்ய குற்றவியல் சதி செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டது.

Scroll to Top