பார்க்கிங் இடம் தொடர்பான தகராறு காரணமாக, உள்ளூர் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் இருவர் மோதிக் கொண்ட சம்பவம் பின்னர் சமூக ஊடகங்களில் வைரலானது.
கடந்த , மார்ச் 4 அன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள இ-ஹெய்லிங் நீண்ட கால கார் பார்க்கிங்கில் (LTCP) பொதுமக்களில் ஒருவரால் இந்த வாக்குவாதம் பதிவு செய்யப்பட்டதாக KLIA மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தா இந்த சம்பவத்தில் 50 மற்றும் 34 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக தவறான புரிதலைக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப் பட்டது,” என்று ரவி கூறினார்.
இருப்பினும், இருவரும் பின்னர் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து அதை இணக்கமாகத் தீர்க்க ஒப்புக்கொண்ட தாக ரவி கூறினார். பொதுமக்கள் விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், பொது இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் தொடர்பான எந்த வொரு தகராறையும் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் ரவி அறிவுறுத்தினார்.




