இன்று கிள்ளான் காவல் நிலையத்தில் இந்தப் மூதாட்டியை கண்டேன். யாரோ அவரை காவல் நிலையத்திற்கு அனுப்பி யுள்ளனர். அவருக்கு டிமென்ஷியா குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. அவரது முகவரி நினைவில் இல்லை. நான் அவரது பெயரைக் கேட்டபோது, அவர் சிசிலியா என்று குறிப்பிட்டார்.
நேற்று இரவு முதல் அவர் காவல் நிலையத்தில் இருந்தார். இந்தச் செய்தியைச் சொல்ல அனை வரின் உதவியையும் நாடி, குடும்ப உறுப்பினர் முன்வந்து இந்த ஏழை மூதாட்டியைக் காப்பாற்றுவர் என்று நான் நம்புகிறேன் என நல் உள்ளம் கொண்ட ஒருவர் கேட்டுக் கொண்டார்




