மலேசியர்கள் நோன்புப் பெருநாளுக்கு தயாராக உதவும் வகையில், ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டதை விட, நாளை முதல் படிப்படியாகக் கொண்டு வரவு வைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
மத்திய கிழக்கில் உள்ள புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்று அவர் கூறியதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் புத்திசாலித்தன மாகச் செலவிட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
செங்கடல் போன்ற முக்கிய கப்பல் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் உலகளவில் எண்ணெய், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை பாதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.




