Vimarsagan Media

Home » Malaysia » உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மலேசியா திறம்படக் கையாளும்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மலேசியா திறம்படக் கையாளும்

மலேசியா, இவ்வாண்டு மே வரையாவது போதுமான அளவு பெட்ரோலியம் இருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதனால் தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை அண்டை நாடுகளைவிட மலேசியா மேலும் திறம்படக் கையாள முடியும் என்று கூறப்படுகிறது.

நிதி நிர்வாகத்தில் அரசாங்கத்தின் வளர்ச்சி, ரோன் 95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என வைத்திருப்பதில் கொண்டுள்ள கடப்பாடு ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது என்று சமூக, பொருளியல் ஆய்வுப் புத்தாக்க அமைப்பின் தலைவர் டாக்டர் ஹெல்மி ஹாஜா மைதீன் தெரிவித்தார்.

இருப்பினும், எது பாதுகாக்கப்படுகிறது, எது பாதுகாக்கப்படவில்லை என்பது குறித்து அரசாங்கத்துக்குத் தெளிவான பார்வை இருக்கவேண்டும் என்று டாக்டர் ஹெல்மி வலியுறுத்தினார்.

ரோன் 95 மானியம், பெட்ரோல் விலைகளைப் பாதுகாக்கிறது என்று கூறிய அவர், அதிகரிக்கும் உணவு விலை, உயரும் போக்குவரத்துக் கட்டணங்கள் போன்ற மறைமுகத் தாக்கம் குறித்து அரசாங்கம் அறியவேண்டும் என்றார்.

Scroll to Top