Vimarsagan Media

Home » Malaysia » ஆர்வலர் தமிம் டாஹ்ரி வழக்கு மே 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்வலர் தமிம் டாஹ்ரி வழக்கு மே 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புனித இந்து சின்னத்தை அவமதித்த தாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட விருந்த சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், தற்போது சவூதி அரேபியாவில் இருப்பதாக லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது வழக்கு மே 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் ஹெமி அன்னெரினா ஹாஜா மைடின் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, ​​தமிமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து வதற்கு ஏதுவாகக் குறைந்தது இரண்டு மாதங்களாவது அவகாசம் கோரி துணை அரசு வழக்கறிஞர் கைருல் அனுவார் ஹலிம் வழக்குத் தொடர்ந்ததாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

தமிம் பாங்காக் அனைத்துலக விமான நிலையம் வழியாக ரியாத்திற்குப் பயணம் செய்ததாக கைருல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இருப்பினும், தமீம் சவூதி அரேபியாவிற்குள் சுற்றுலா விசாவிலோ அல்லது வெவ்வேறு கால அளவுகளில் தங்குவதற்கு அனுமதிக்கும் உம்ரா விசாவிலோ நுழைந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கைருல் கூறினார். இதனைத் தொடர்ந்து, ஹெமி அன்னெரினா இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்காக மே 17 ஆம் தேதியை நிர்ணயித்தார்.

Scroll to Top