சட்டக் கட்டணங்களைச் செலுத்த முடியாத மலேசியர்கள் நீதியைப் பெற உதவுவதற்காக வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணிகளைச் செய்ய ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் கூறினார்.
நீதிமன்றங்களுக்குச் செல்வதில் நிதி சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு சட்ட உதவியின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். “அது ஒரு தடையாக இருக்கிறது, அதனால்தான் சட்ட உதவி வருகிறது, நிறைய வழக்கறிஞர்கள் நல்லா வேலை செய்கிறார்கள், இவை அனைத்தும் பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டும்,” என்று அவர் சமீபத்திய ஊடக பேட்டியில் கூறினார்.
இந்தக் குழுக்கள், எடுத்துக்காட்டாக, வறுமைக் கோட்டில் இருப்பவர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சட்ட உதவிக்கு தகுதி பெற வருமான வரம்பை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
நீதி கிடைப்பதற்கு, ஒரு தனிநபர் தனது பிரச்சினை ஒரு சட்டப் பிரச்சினை என்பதை முதலில் அங்கீகரிக்கவோ அல்லது புரிந்துகொள்ளவோ வேண்டும் என்று நளினி மேலும் கூறினார்.
“சிலர் தங்களுக்கு இருக்கும் பிரச்சினை ஒரு சட்டப் பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், தங்களுக்கு ஒரு சட்டப் பிரச்சினை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதற்குக்கூட, அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க எங்கு செல்ல வேண்டும் என்று கூறவும், அவர்களின் குறைகளைக் கேட்கவும், ஒரு பயனுள்ள தீர்வைக் கொடுக்கவும் ஒருவர் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.




