Vimarsagan Media

Home » India » அண்மைய போர் பெரும் முதலீடு செய்த இந்திய நிறுவனங்களுக்கு கனவுநிலை

அண்மைய போர் பெரும் முதலீடு செய்த இந்திய நிறுவனங்களுக்கு கனவுநிலை

கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பெரும் முதலீடுகளைச் செய்துள்ள இந்தியச் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) இது ஒரு வாழ்வாதாரப் போராட்டமாக மாறியுள்ளது. சுமார் 800 இந்திய நிறுவனங்கள் செய்துள்ள 1.3 பில்லியன் டாலர் முதலீடு தற்போது கனவு நிலையில் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய முதலீட்டுத் தளமாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்-அப்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் சர்வதேச வர்த்தகத்தை விரிவாக்க துபாய் மற்றும் அபுதாபியைத் தேர்ந்தெடுத்தன. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இந்த கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட துறைகள் மற்றும் முதலீட்டு விவரங்கள் மணி கன்ட்ரோல் (Moneycontrol) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நேரடி வெளிநாட்டு முதலீட்டு (FDI) தரவுகளின் படி, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்திய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.

Scroll to Top