மனநலம் குன்றியவர் என நம்பப்படும் 52 வயதுப் பெண் ஒருவர், அதிகாலை தனது படுக்கையறையில் மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்ததை அவரது கணவர் கண்டறிந்தார்.
தொழிற்சாலை ஊழியரான கோய் ஃபியூ சுவென் என்ற அந்தப் பெண், சுங்கை துவா, தமன் தேசா முர்னியில் உள்ள அவர்களது அடுக்கு வீட்டின் மேல் தளத்தில் காலை சுமார் 9.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டார்.
வழக்கம் போல் காலை உணவு தயாரிக்க அவர் கீழே வராததால், அவரது கணவர் கவலையடைந்தார். உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த படுக்கை யறையை அவர் சோதித்தபோது, அவர் ரத்தத்தில் நனைந்திருப்பதைக் கண்டார்.
செபெராங் பெராய் வடக்கு காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறை குழுவினர், தடயவியல் அதிகாரிகளுடன் இணைந்து, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர் காவல்துறையினர் ஒரு கத்தியைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றச் செயலுக்கான எந்த அறிகுறிகளையும் அதிகாரிகள் கண்டறியவில்லை.
செபராங் ஜெயா மருத்துவமனையில் நடைபெறவிருக்கும் பிரேதப் பரிசோதனை நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு திடீர் மரண அறிக்கை (SDR) என வகைப்படுத்தப் பட்டுள்ளது.




