Vimarsagan Media

Home » World » போர் தொடங்கியதிலிருந்து, எஸ்ஐஏ துபாய்க்கான சேவைகள் ரத்து

போர் தொடங்கியதிலிருந்து, எஸ்ஐஏ துபாய்க்கான சேவைகள் ரத்து

மத்திய கிழக்கு போர் நீடிப்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வெள்ளிக்கிழமை (மார்ச் 20), சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏப்ரல் 30 வரை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கிய பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, எஸ்ஐஏ துபாய்க்கான விமானச் சேவைகளை ரத்து செய்தது.

தனது இணையத்தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் ‘புவிசார் அரசியல் சூழ்நிலை’ காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எஸ்ஐஏ கூறியுள் ளது.நிலவரம் ‘நிலையற்றதாக இருப்பதால்’ மற்ற விமானங்களும் பாதிக்கப்படலாம் என்றும் அது எச்சரித்தது.

“விமான ரத்து காரணமாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்து தரப்படும் அல்லது அவர்கள் தங்கள் பயணச்சீட்டின் பயன்படுத்தப்படாத பகுதிக்கு முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்,” என்று எஸ்ஐஏ கூறியது.

மேலும், எஸ்ஐஏவிடம் நேரடியாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இணையத்தில் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் அது கூறியது. பயண முகவர்கள் அல்லது பங்காளித்துவ விமான நிறுவனங்கள் மூலம் செய்யப்பட்ட முன்பதிவுகள் தொடர்பில், வாடிக்கையாளர்கள் தங்களின் பயண முகவர் அல்லது டிக்கெட் வாங்கிய விமான நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Scroll to Top