பிரசிங்ட் 1-ல் இருந்து பிரசிங்ட் 12-ல் உள்ள தாமான் (wet land) ஈரநிலத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இருவர்உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
புத்ராஜயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் எம். ஹாசிக் ஹாஸ்மி கூறுகையில், காலை 11.58 மணிக்கு NG999 எண் வழியாகத் தமக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, பிரசிங்ட் 14 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) ஒரு வாகனம் மற்றும் EMRS குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப் பட்டதாகத் தெரிவித்தார்.
மதியம் 12.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தபோது, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதும் முன் சறுக்கிய புரோட்டான் சாகா காரை குழுவினர் கண்டனர். விபத்தின் தாக்கத்தால் பலர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டிருந் தனர்.
“இந்த சம்பவத்தில் ஆறு பேர் பாதிக்கப்பட்டனர், மேலும் இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதார அமைச்சு (KKM) உறுதிப்படுத்தியுள்ளது,” என்று புத்ராஜயாவில் உள்ள கூட்டரசு பிரதேச தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.




