மீ டூ’ புகார்களைச் சுட்டிக்காட்டி கண்டனம் கவிஞர் வைரமுத்து மீதான ‘மீ டூ’ புகார்கள் மற்றும் அவரது வணிக ரீதியான எழுத்துக்களைச் சுட்டிக்காட்டி, ஞானபீட விருதைத் திரும்பப் பெறக் கோரி தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 230-க்கும் மேற்பட்டொர் பொது கண்டன கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கால் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் மொழிக்குக் கிடைத்துள்ள ஞானபீட விருது, கொண்டாட்டத்திற்குப் பதிலாகப் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது. கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய அங்கீகாரம் “நவீன இலக்கியத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு” என எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பவா செல்லதுரை சாடியுள்ள நிலையில்,
230-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் ஒன்றிணைந்து இவ்விருதைத் திரும்பப் பெறக் கோரி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். வைரமுத்து மீதான ‘மீ டூ’ புகார்கள் மற்றும் அவரது வணிக ரீதியான எழுத்துக்கள் இலக்கியத் தரமற்றவை என்பதை முன்வைத்து இந்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.




