மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்து விட்டது.
விமான நிலையங்கள், வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதும் பாதுகாப்பு அம்சங்களுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.அத்துடன், விமான எரிபொருள் விலை இருமடங்கைத் தாண்டிவிட்டதும் விமானப் போக்கு வரத்துத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக வில்சன் தெரிவித்துள்ளார்.
“அடுத்த மாதம்தான் அதிக பாதிப்பு இருக்கும்,” என்றும் அவர் சொன்னார். இதனையடுத்து, கூடுதல் செலவைச் சமாளிக்கும் வகையில் புதிய பயணச் சீட்டுகளுக்கு ‘எரிபொருள் கூடுதல் கட்டணத்தை’ (Fuel Surcharge) ஏர் இந்தியா ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது.
“பிரிட்டன், ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகிய வட்டாரங்களுக்கான விமானங்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கூடுதல் எரிபொருள் தேவைப்படுகிறது; பயண நேரமும் அதிகமாகிறது,” என்றும் வில்சன் சொன்னார்.




