மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் வளர்ச்சியைத் தொடர்ந்து போதுமான மருந்து விநியோகம் இருப்பதை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், நாட்டில் மருந்து விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்தது.
மார்ச் 22, 2026 நிலவரப்படி, மருந்து விநியோகத் தடைகள் தொடர்பான PRH அறிக்கைகளின் போக்கில் எந்த அதிகரிப்பும் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்தது.
உள்ளூர் மருந்துத் தொழில்துறை யிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டத் தின்படி, உற்பத்தியாளர் களிடம் மூன்று மாதங்கள் வரையிலான மூலப் பொருட்களும், சுமார் இரண்டு மாதங்களுக்கான முடிக்கப்பட்ட பொருட்களும் கையிருப்பில் இருந்தன.
அதே நேரத்தில், இறக்குமதியாளர்களும் விநியோகம் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, தத்தமது விநியோகச் சங்கிலிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர் என்றது அமைச்சு..




