தற்போதைய பொருளாதார சவால்களும், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலும், 2027 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் மலேசியாவின் ஆயத்தப் பணிகளைப் பாதிக்காது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜோஹரி தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட போதிலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளை யாட்டுப் போட்டிகளின் கௌரவத்தைப் பேணுவதற்காக, நிகழ்வின் தரமும் தரநிலையும் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
சரவாக், பினாங்கு, ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நான்கு முக்கிய விளையாட்டு மையங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதும் இந்தச் செலவுக் குறைப்பு நடவடிக்கை களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
புதிய வசதிகளைக் கட்டுவதற்கு நாங்கள் பெரிய தொகையைச் செலவிடப் போவதில்லை. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் ஏற்கனவே முழுமையான வசதிகள் உள்ளன, மேலும் அவை 2027 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தயாராக உள்ளன.
“அதிக செலவை ஏற்படுத்தும் புதிய உள்கட்டமைப்பைக் கட்டுவதை விட, தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்து வது அல்லது தரம் உயர்த்துவதே இப்போது மிகவும் முக்கியமானது, என பெர்னாமா நேர்காணலில் அவர் கூறினார்.
சரவாக், இந்த விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய தொகுப்பாகவும், தொடக்க விழா நடைபெறும் இடமாகவும் செயல்படும் என்றார்




