Vimarsagan Media

Home » Malaysia » வீடு பூட்டப்பட்ட நிலையில் இரு சடலம் கண்டெடுப்பு

வீடு பூட்டப்பட்ட நிலையில் இரு சடலம் கண்டெடுப்பு

இங்குள்ள பீடோங்கிற்கு அருகிலுள்ள கம்போங் ஜைனோல் அபிடின் என்ற இடத்தில், இருவர் அவர்களது வீட்டில் இறந்த நிலையில்கண்டெடுக்கப்பட்டனர்.

இறந்தவர் 40 வயதுகளில் உள்ள ஆண் என்றும், அவரது தாயார் 70 வயதுகளில் உள்ளவர் என்றும் கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ராம்லான் கூறினார்.

நேற்று மாலை 6.05 மணிக்கு புகார் பெறப்பட்டது. ஆரம்பகட்ட ஆய்வில் கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் கண்டறியப் பட வில்லை. “வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால், அவர்கள் உடைத்து உள்ளே நுழைய வேண்டியிருந்தது. வரவேற்பறை மற்றும் சமையலறையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், இன்று காலை பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப் படுவ தாகவும் அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வரும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்

Scroll to Top