Vimarsagan Media

Home » Malaysia » போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகருக்கு காவல் துறை ஜாமீன்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகருக்கு காவல் துறை ஜாமீன்!

கடந்த வாரம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆண் நடிகர் சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்களைக் காவல்துறையினர் இறுதி செய்து வருவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

“விசாரணை ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டு, அவற்றை மேலும் முழுமையாக்குவதற்கான பல அறிவுறுத்தல்களுடன் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.”

“1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் (ADB) பிரிவு 15 (1) (a)-க்கு இணங்க விசாரணை ஆவணங்கள் இறுதி செய்யப்படும் வரை, சம்பந்தப்பட்ட நபருக்குக் காவல் துறையினர் ஜாமீன் வழங்கியுள்ளனர்,” என்று அவர் இன்று இங்குள்ள சிலாங்கூர் காவல்துறைப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஜனவரி 29 அன்று, சம்பந்தப்பட்ட நடிகரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட நடிகர் THC போதைப்பொருள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு RM5,000 அபராதம் செலுத்த அனுமதித்ததைத் தொடர்ந்து, அந்த நடிகர் சிறைத் தண்டனை யிலிருந்து தப்பித்தார்.

Scroll to Top