பெரிய அளவிலான குற்றக் கும்பல் களுக்கு எதிரான நடவடிக்கைகளை மலேசிய அரச காவல்துறை தீவிரப் படுத்தி வரும் நிலையில், செல்வாக்கு மிக்க நபர்கள் அதில் தலையிட வேண் டாம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது நிர்வாகத் தின் கீழ் எந்தவொரு தடையும் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
காவல்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்ற 219வது காவலர் தின நினைவுக் கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர், செல்வாக்கு மிக்க தரப்பினர் சில தனிநபர்களைப் பாதுகாக்கும் கடந்தகாலப் போக்குகள், சட்ட அமலாக்க முயற்சிகளைத் தடுத்து, சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தியதாகக் கூறினார்.
மலேசிய அரச காவல்துறை மற்றும் அமலாக்க முகமைகளின் நடவடிக்கை களுக்கு எந்தத் தலையீடும் தடையாக இருக்க வேண்டாம். சில சமயங்களில், பாதுகாப்பு வழங்குபவர்கள் செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கிறார்கள். இது காவல்துறையின் பணியை மேலும் கடினமாக்குகிறது.
“நான் ஒரு மிகத் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளேன்: நாம் உண்மை யிலேயே நடவடிக்கை எடுக்க உறுதி யுடன் இருந்தால், அனைத்துத் தரப்பினரும் எந்த வகையிலும் தடையாக இருக்க வேண்டாம் என்றும் நாம் அறிவுறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
முன்னர் தொட முடியாததாகத் தோன்றிய, நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் குற்றக் கும்பல்கள் மற்றும் உயர் மட்ட ஊழல் வழக்குகளைக் கையாள்வதில், காவல்துறை மிகவும் உறுதியான மற்றும் துணிச்சலான அணுகுமுறையைக் கையாண்டதாக அவர் பாராட்டினார்.




