Vimarsagan Media

Home » India » மனசு உடையும் என்று தெரிந்தும் அதை அனுபவிக்க தயாராகிறோம :- திரிஷா

மனசு உடையும் என்று தெரிந்தும் அதை அனுபவிக்க தயாராகிறோம :- திரிஷா

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக பல்வேறு வதந்திகளின் மையமாக மாறியிருக்கிறார். குறிப்பாக விஜய் தொடர்பான சர்ச்சைகள், பொது விழாக்களில் இருவரும் ஒன்றாக போனது போன்ற விஷயங்கள் அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், திரிஷா தனது வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமாவை தாண்டி, திரிஷாவுக்கு நாய்கள் மீது உள்ள பாசம் மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக அவர் வளர்த்த ஜோரோ என்ற நாய், அவருக்கு சாதாரண செல்லம் அல்ல, குடும்ப உறுப்பினர் மாதிரி. அந்த நாயை அவர் “மகன்” என்று தான் அழைத்தார். ஆனால் 2024 இறுதியில் ஜோரோ இறந்தது திரிஷாவை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது. அந்த காலத்தில் அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவுகளே அந்த பாசத்தை வெளிப்படுத்தின.

திரிஷாவின் செல்ல நாய் அந்த இழப்பிலிருந்து மெதுவாக மீண்டு வந்த அவர், 2025 தொடக்கத்தில் இஸ்ஸி என்ற மற்றொரு நாயை தத்தெடுத்தார். இஸ்ஸியையும் அவர் மகளாகவே பார்த்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் இஸ்ஸியை குளிக்க வைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ சாதாரணமாக இருந்தாலும், அதில் தெரிந்த பாசம் ரசிகர்களை கவர்ந்தது. “

. அதில், நாய்களை வளர்ப்பவர்களின் மனநிலையை பற்றி ஒருவர் பேசும் காட்சி இருந்தது. “நாய்கள் நம்மை விட குறைவாக வாழும் என்று தெரிந்தும், அவர்களை நம்ம வாழ்க்கையில் வரவழைக்கிறோம். ஒருநாள் அவர்கள் போகும் போது நம்ம மனசு உடையும் என்று தெரிந்தும் மீண்டும் அதை அனுபவிக்க தயாராகிறோம்” என்ற அந்த கருத்து பலரையும் பாதித்தது. திரிஷா இன்னும் ஜோரோவை நினைத்து வருத்தப்படுகிறார் என்ற உணர்வு ரசிகர்களுக்கு தெளிவாகியுள்ளது.

Scroll to Top