பெரிகாத்தான் நேஷனலில் (PN) ஏற்பட்டுள்ள தலைமை மாற்றங்களைத் தொடர்ந்து, தற்போதைக்கு பாரிசான் நேஷனலுடன் (BN) இணைந்து தற்போதைய நிலையைத் தொடர
மஇகா முடிவு செய்துள்ளது என துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். கடந்த ஆண்டு கட்சியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது பெரிக்காத்தான் நேசனல் உடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் முடிவு எடுக்கப்பட்டபோது, டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் அப்போதும் அதன் தலைவராக இருந்தார் என்று அவர் கூறினார்.
இருப்பினும், கடந்த மாதம் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் சம்சுரி மொக்தார் பெரிக்காத்தான் நேசனல் தலைவராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து, தற்போது பாஸ் எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்குவதால், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு ம இ கா இந்திய சமூகத்தின் உணர்வுகளை மதிப்பிட வேண்டும் என்று சரவணன் கூறினார்.
“அவர் ஜொகூர் மந்திரி பெசாராக இருந்த காலம் முதல், மத்திய அரசாங்கத்தில் அவர் ஆற்றிய பங்கு, பின்னர் பிரதமராக இருந்த காலம் வரை, டான்ஸ்ரீ முகிதீனுடன் ம இ கா இருந்த நீண்டகால பணி உறவின் அடிப்படையில் அந்த நேரத்தில் எங்கள் உறுப்பினர்கள் அந்த முடிவை எடுத்தனர் என்றார்




