Vimarsagan Media

Home » Malaysia » செலவுகள் 100% வரை அதிகரிப்பு சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் அவதி

செலவுகள் 100% வரை அதிகரிப்பு சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் அவதி

சமீபத்தில் டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வால், தங்களின் இயக்கச் செலவுகள் 100% வரை அதிகரித்து ள்ளதால், பல சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் தங்கள் தொழிலை மூட நேரிடலாம் என எச்சரித்துள்ளன.

வடக்கு மண்டல சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் அமாட் ருஸ்லான் அப்துல் லத்தீப், சங்கத்தின் கீழ் உள்ள சுமார் 100 நிறுவனங்கள் இந்த விலை உயர்வின் நீண்டகாலத் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும், இது சில நிறுவனங்களைத் தங்கள் செயல் பாடுகளை நிறுத்த நிர்பந்திக்கக்கூடும் என்றும் கூறினார்.

உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் ஒரு கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்கத் தங்கள் குழு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

“டீசல் விலை உயர்வால், எங்களின் முந்தைய விலைப்புள்ளிகள் செல்லாத தாகிவிட்டன. இயக்கச் செலவுகள் இரட்டிப்பாகியுள்ளன, அதாவது லாபம் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. இந்த நிலை தொடர்ந்தால், எங்கள் தொழில்களை நாங்கள் எப்படித் தக்கவைத்துக் கொள்ள முடியும்?”

ஒரு தீர்வைக் காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நடத்துநர்களின் சுமையைக் குறைக்க உதவும் வகையில், முன்கூட்டிய உதவி மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள் போன்ற சலுகைகளை நாங்கள் முன்மொழிய விரும்புகிறோம் என்றார்

Scroll to Top