Vimarsagan Media

Home » Malaysia » திருடப்பட்ட 30 அஸ்திக் கலசங்கள் நான்கை காவல்துறை மீட்டுள்ளது

திருடப்பட்ட 30 அஸ்திக் கலசங்கள் நான்கை காவல்துறை மீட்டுள்ளது

நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள ஒரு நினைவுப் பூங்காவின் அஸ்திக்குடில்களில் இருந்து சமீபத்தில் திருடப்பட்ட 30 அஸ்திக் கலசங்கள் நான்கை காவல்துறை மீட்டுள்ளது.

நீலாய் காவல் துறைத் தலைவர ஜொஹாரி யஹ்யா, இந்தத் திருட்டு தொடர்பாக 10 சாட்சிகளிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

“விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் நினைவுப் பூங்காவின் ஊழியர்கள் உட்பட சாட்சிகளிடம் காவல் துறை இன்னும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது.

“இதில் உள்ளூர்வாசிகளுக்கு ஏதேனும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதா என்பது நாங்கள் ஆராய்ந்து வரும் ஒரு அம்சமாகும்.” விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

கூலாயில் முன்னர் நடந்த அஸ்தி திருட்டுடன் இந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருவதாக ஜோஹரி கூறினார்.

கட்டிடத்தில் திருடுவதற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380, மிரட்டிப் பணம் பறிப்பதற்கான பிரிவு 384, மற்றும் அடக்க ஸ்தலத்தில் அத்துமீறி நுழைவதற்கான பிரிவு 297 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவங்களில், மார்ச் 9 அன்று ஜொகூன் கூலாயில் உள்ள நிரந்தர நினைவுப் பூங்காவிலிருந்து 22 அஸ்திக்குடங்கள் திருடப்பட்டதும்; மார்ச் 18 அன்று நெகிரி செம்பிலானின் நீலாய் பகுதியில் உள்ள சியாவோ என் நினைவுப் பூங்காவிலிருந்து 30 அஸ்திக்குடங்கள் திருடப்பட்டதும்; மற்றும் வெளியிடப்படாத எண்ணிக்கையிலான அஸ்திக்குடங்கள் திருடப்பட்டதும் அடங்கும் என்றார் அவர்

Scroll to Top