ஜனவரி 1 முதல் நேற்று வரை 538 வழக்குகளில் RM8.59 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இணையவழி கொள்முதல் அல்லது மின்வணிக மோசடியில் அதிகபட்சமாக 212 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இதில் RM1.65 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இணையவழி முதலீட்டு மோசடியில் 103 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் RM3.55 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன டெலிகிராம் தளம் வழியாக நிகழும் இல்லாத முதலீட்டு மோசடி உட்பட, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெரும் இழப்புகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 318 வழக்குகளில் மொத்தம் RM31.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது,” .
219வது காவலர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற “கோக்கனட் ஷேக் டுலு” காவல்துறை மற்றும் ஆண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் யூ கீ லியோங்கும் கலந்துகொண்டார்.
இல்லாத கடன்கள் தொடர்பான வழக்குகள் மூன்றாவது அதிகபட்ச இணையவழி மோசடி வழக்குகளாகப் பதிவாகியுள்ளன என்றார். RM719,980.73 இழப்புடன் 84 வழக்குகள் பதிவாகி யுள்ளன. அதனைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பு மோசடியில் RM643,855.66 இழப்புடன் 58 வழக்குகள் பதிவாகியுள்ளன.
‘தொலைபேசி மோசடி’யில் RM1.3 மில்லியன் இழப்புடன் 46 வழக்குகளும், நண்பர் போல் நடித்துப் பணம் கடன் வாங்கும் மோசடியில் RM133,721 இழப்புடன் 24 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
“காதல் மோசடி அல்லது பார்சல் மோசடியில் RM602,010 இழப்புடன் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. காதல் மோசடியில், பாதிக்கப்பட்டவரின் பலவீனங்களைக் கண்டறிந்து அவர் களை வலையில் வீழ்த்துவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீண்ட அறிமுகக் காலம் தேவைப்படுகிறது என கூறினார்




