Vimarsagan Media

Home » India » கோவாவில் புது சொத்து… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரவி மோகன்

கோவாவில் புது சொத்து… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரவி மோகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2024-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ரவி மோகன் அவரது தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் எழுந்த சர்ச்சைகள், அவற்றை சுட்டிக் காட்டி ஆர்த்தி எழுப்பிய கேள்விகள் பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், தற்போது நடிகர் ரவி மோகன், சொத்து வாங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் இணைந்து கோவாவில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்தை வாங்கியுள்ளார்.

இதில் என்ன சர்ச்சை என்று தானே கேட்குறீர்கள்? இருக்கு… அதாவது ரவிமோகன் வாங்கிய சொத்து ஆவணத்தில் தன்னை திருமணமாகாத வர் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவியை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே என்பதால், இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Scroll to Top