Vimarsagan Media

Home » India » பிரதமர் மோடி – டிரம்ப் தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மாஸ்க்!

பிரதமர் மோடி – டிரம்ப் தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மாஸ்க்!

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கடந்த மார்ச் 24 அன்று தொலைபேசியில் உரையாடி னார்கள்.

இந்நிலையில் இருவருகிடையேயான தொலைபேசி அழைப்பில் உலக பெரும்பணக்காரர் எலான் மாஸ்க்கும் இணைந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், மோடி – டிரம்ப் உரையாடலில் மாஸ்க் பங்கேற்றதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான உரையாடலில் ஒரு சாதாரண மூன்றாம் நபர் இணைந்தது அசாதாரணமானது என்றும் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இதை தொடர்ந்து இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் கடந்த மார்ச் 24 அன்று பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே நடைபெற்ற முக்கியமான உரையாடலில் மூன்றாவது நபர் யாரும் பங்கேற்கவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சு இச்செய்தியை மறுத்துள்ளது.

Scroll to Top