கோத்தா கினபாலுவில் உள்ள ஜெஸ்ஸல்டன் குவே அருகே போக்குவரத்து சிக்னலில் ஒரு வாகனத்தை நோக்கி ஒரு குழுவினர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதைக் காட்டும் வைரல் வீடியோ தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோத்தா கினபாலுவின் தற்காலிக காவல்துறைத் தலைவர், சையத் லாட் சையத் அப் ரஹ்மான், மதியம் 2.35 மணிக்கு 30 வயது ஆண் ஆசிரியர் ஒருவர் புகார் அளித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.
சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (SICC) நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு முடித்த பிறகு, அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
“கோத்தா கினபாலு துறைமுகத்தில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் கிடங்குக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் புகார்தாரர் தனது வாகனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வளாகத்தின் ஊழியர்கள் என்று நம்பப்படும் பல நபர்களால் அவர் எதிர்கொள்ளப்பட்டார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“நிலைமை பதற்றமடைவதற்கு முன்பு, அவர்களுக்குள் வாய்மொழித் தூண்டு தல் ஏற்பட்டது. இதன் காரணமாக, புகார்தாரர் தனது வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்தியபோது, தற்செயலாக மற்றொரு வாகனத்தின் மீது மோதினார் என தெரிய வருகிறது.




