கல்வித் துறையில் பணி ஓய்வு பெற்ற சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குனர் செங்குட்டுவன் வீரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஓர் ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கி, உழைப்பின் மூலம் கல்வித் துறையில் உயர்ந்த பொறுப்பான உதவி இயக்குனர் பதவியை அடைந்து, கல்வி வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம், சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறப்பாகச் சேவை செய்து தமிழுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியுள்ளார் என அந்நிகழ்வுக்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ எம் சரவணன் கூறினார்.
தமிழ் மொழி வளர்ச்சி என்பது ஒரு மொழியின் வளர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் மரியாதையும், அடையாளமும் ஆகும். அந்த அடையாளத்தை உயர்த்திப் பாதுகாத்து, தமிழ் மொழிக்கும் தமிழ் மாணவர்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய .செங்குட்டுவன் வீரன் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார் ம.இ கா துணைத் தலைவரும் ,தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம் சரவணன்.




