தெலுக் பங்லிமா காரங்கில் மஞ்சள் நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் வீட்டு வாசலில் உள்ள பார்சல்களைத் திருடுவதை ஒரு வைரல் சிசிடிவி காணொளி அம்பலப் படுத்துகிறது. சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தனது முகவரியில் வரும் பார்சல் விநியோகங்கள் காணாமல் போவதைக் கவனித்த பயனர் தனது வீட்டுப் பாதுகாப்பு கேமராக்களில் இருந்து பல காணொளிகளைப் பதிவிட்டு, இந்த காணொளியை ‘த்ரெட்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொளிகளில், ஒரு இணையர் மஞ்சள் நிற ஸ்கூட்டரில் வந்து ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே நிறுத்துவது தெரிகிறது. அவர்களில் ஒருவர் — சிவப்பு நிற உடை மற்றும் ஹெல்மெட் அணிந்தவர் — ஸ்கூட்டரிலிருந்து இறங்கி வீட்டின் வளாகத்திற்குள் நடந்து செல்கிறார், அதே நேரத்தில் அவரது துணைவர் வாயிலுக்கு வெளியே ஸ்கூட்டரில் காத்திருக்கிறார். சில கணங்களுக்குப் பிறகு, அந்த நபர் கையில் ஒரு தபால் பார்சலுடன் மீண்டும் தோன்றி, இருவரும் ஒன்றாக வேகமாகச் செல்கின்றனர்.
என் பகுதியில் ஏற்கெனவே திருடர்கள் இருக்கிறார்கள். ஒரு மஞ்சள் ஸ்கூட்டரில் ஒரு இணையர் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தெலுக் பாங்லிமா காரங்/ஜாலான் கெபுன் பகுதியைச் சுற்றி. சமீபகாலமாக எங்கள் பார்சல்கள் காணாமல் போவதில் ஆச்சரியமில்லை,” என்று அந்தப் பதிவர் எழுதியிருந்தார்.




