சுற்றுலாப் பேருந்து மற்றும் சுற்றுலா வேன் நடத்துபவர்கள் தங்கள் விலைகளை 80 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம் என மலேசிய உள் சுற்றுலா சங்கம் (MITA) இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விலை வழிகாட்டுதலில் அறிவித்துள்ளது. மலேசியாவில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், உள்ளூர் சுற்றுலாத் துறையின் பிழைப்பிற்கு இந்த விலை வழிகாட்டுதல் மிகவும் அவசியம் என அத்துறை வலியுறுத்தியுள்ள நிலையில், MITA தலைவர் மின்ட் லியோங் இந்த புதிய விலை வழிகாட்டுதலை அறிவித்தார்.
\
எனவே, சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வேன்களுக்கான கட்டண உயர்வை நாங்கள் அறிவிக்கிறோம். சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை செய்வதற்கு முன்பு, எங்கள் தொழில் துறையினர் முதலில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். “செல்லும் இடத்தைப் பொறுத்து, சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வேன்களுக்கான தினசரிக் கணக்கீடுகளின்படி, நாங்கள் கட்டணத்தை சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை உயர்த்துகிறோம்,” என்று அவர் நேற்று இங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இருப்பினும், சுற்றுலாப் பேருந்து மற்றும் சுற்றுலா வேன் நடத்துபவர்கள் வசூலிக்கக்கூடிய “உச்சகட்ட விலை” அல்லது அதிகபட்ச விலைக்கு இது ஒரு வழிகாட்டி மட்டுமே என்றும், ஒட்டுமொத்த சுற்றுலாத் துறைக்கும், வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா முகவர் நிறுவனங் களுக்கும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் விலை வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் லியோங் கூறினார்.
இது நுகர்வோர் பாதுகாப்பாக உணரவும், இதுபோன்ற போக்குவரத்துச் சேவை களுக்கு அவர்கள் அதிக கட்டணம் செலுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் உதவும் என்றும், அதே நேரத்தில் உள்ளூர் சுற்றுலாத் துறையினர் அதிகரித்து வரும் டீசல் விலையைச் சமாளிக்க தாங்கள் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச விலை உயர்வை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்




