Vimarsagan Media

Home » Malaysia » ஏர்ஆசியாவின் கட்டணம்மற்றவர்களை விட மிகக் குறைவாகவே உயரும்: டோனி

ஏர்ஆசியாவின் கட்டணம்மற்றவர்களை விட மிகக் குறைவாகவே உயரும்: டோனி

மத்திய கிழக்கில் நிலவும் மோதலைத் தொடர்ந்து ஏர்ஏசியாவின் கட்டணங்களில் ஒரு சிறிய உயர்வு ஏற்படக்கூடும், ஆனால் அவை கட்டுப்படியாகக்கூடியதாகவே இருக்கும் என்று கேபிடல் ஏ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

தேவை வலுவாக இருப்பதால், இந்த மலிவு விலை விமான நிறுவனம் தனது விமானச் சேவைகளை ரத்து செய்யாது என்றும், எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாமல் கட்டண மாற்றங் களுக்கு வழிவகுக்கும் என்றாலும், தனது போட்டியாளர்களின் கட்டண உயர்வுகளை விடக் குறைவாகவே வைத்திருக்க ஏர்ஏசியா நோக்கம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“கட்டணங்கள் உயரத்தான் வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் எங்கள் கட்டணங்கள் மற்றவர் களை விட மிகக் குறைவாகவே உயரும்,” என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது செலவு அழுத்தங்கள் இருந்தபோதிலும், வளைகுடா விமான நிறுவனங்களின் விமானச் சேவைகளின் திறன் குறைந்திருப்பதால், ஏர்ஏசியா தொடர்ந்து இயங்கவும், சுமையின் ஒரு பகுதியைத் தாங்கிக்கொள்ளவும் முடிகிறது என்று பெர்னாண்டஸ் கூறினார்.

“எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற வளைகுடா பிராந்தியத்தின் விமானச் சேவைகளின் இருக்கை எண்ணிக்கை சுமார் 15-20% குறைந்துள்ளதால், இந்த கூடுதல் செலவுகளை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும்,” என்று அவர் கூறினார். மேலும், இந்தத் திறன் குறைப்பு, ஆசியான் நாடுகளுக்கு இப்பகுதியில் மாற்று விமானப் போக்குவரத்து மையங்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top