Vimarsagan Media

Home » Malaysia » உணர்வுப்பூர்வமான உள்ளடக்கங்கள் கையாளும்போது, ​​கவனம் தேவை

உணர்வுப்பூர்வமான உள்ளடக்கங்கள் கையாளும்போது, ​​கவனம் தேவை

அனைத்து ஊடக நிறுவனங்களும், குறிப்பாக விபத்துகள், துயரச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பான உணர்வுப்பூர்வமான உள்ளடக்கங்களைக் கையாளும்போது, ​​எப்போதும் உயர்வான தலையங்க முடிவுகளை எடுக்கவும், நெறிமுறைத் தரங்களைக் கடைப்பிடிக்கவும் நினைவூட்டப் படுகின்றன.

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆபாசமான, மனதைப் புண்படுத்தும் அல்லது இறந்தவர்களைக் காட்டும் படங்கள் அல்லது காணொளிகளைப் பரப்புவது, பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கும் உணர்வற்றதாகவும் அவமரியாதையாகவும் உள்ளது என்று கூறியுள்ளது.

பார்வையாளர்களை பெறுவதற்கான முயற்சிகள் மனித விழுமியங்களையும் சமூகப் பொறுப்பையும் மீறக்கூடாது,” என்று அது குறிப்பிட்டது. மேலும், உள்ளடக்கம் பொறுப்புடனும் விவேகத்துடனும் ஒளிபரப்பப்படுவதை உறுதிசெய்ய, அனைத்து ஊடக நிறுவனங்களும் நெறிமுறை சார்ந்த செய்தி அறிக்கையிடல் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் MCMC வலியுறுத்தியது. “இந்தத் தரநிலைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால், தொடர்புடைய சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவது உட்பட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.”

Scroll to Top