Vimarsagan Media

Home » Malaysia » டிஎன்பி மின்சாரக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிப்பு

டிஎன்பி மின்சாரக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிப்பு

தெனாகா நேஷனல் பெர்ஹாட் (KL:TENAGA) தனது இணைய தளத்தின்படி, மார்ச் மாதத்தில் ஒரு kWh-க்கு 2.15 சென் ஆக இருந்த தானியங்கி எரிபொருள் சரிசெய்தல் (AFA), ஏப்ரல் மாதத்திற்கான ஒரு kWh-க்கு 0.47 சென் தள்ளுபடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் எரிசக்தி ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த AFA, மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற முந்தைய எரிபொருள் செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டணங்களில் மாதாந்திர சரிசெய்தல் களை வழங்குகிறது. இது, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் சரிசெய்யப்பட்டு வந்த சமநிலையற்ற செலவுப் பரிமாற்றத்திற்கு (ICPT) மாற்றாக வந்துள்ளது.

இந்த மாற்றத்தால் மின்சாரக் கட்டணம் அதிகமாகும், ஏனெனில் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் ஒரு kWh-க்கு 1.68 சென் என்ற குறைந்த தள்ளுபடியைப் பெறுவார்கள். உதாரணமாக, ஒரு நுகர்வோர் 800kWh பயன்படுத்தினால், அவர்களின் மார்ச் மாத மின்சாரக் கட்டணம் RM328.34 ஆக இருக்கும், ஆனால் டிஎன் பி-யின் மின்சாரக் கால்குலேட்டரின்படி, ஏப்ரல் மாதத்தில் அது RM342.05 ஆக அதிகரிக்கும்.

Scroll to Top