Vimarsagan Media

Home » Malaysia » ஹலால் சான்றிதழில்லா 97 பெட்டி கோழி மற்றும் இறைச்சி பறிமுதல்

ஹலால் சான்றிதழில்லா 97 பெட்டி கோழி மற்றும் இறைச்சி பறிமுதல்

சிலாங்கூர், காம்பங் பாரு சுபாங்கில் நடைபெற்ற ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையில், ஹலால் சான்றிதழ் இல்லாத 97 பெட்டி உறைந்த கோழிக்கறிகளையும், 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 34 டன் பன்றிக்கறித் துண்டுகளையும் மலேசிய அரச காவல்துறை (PDRM) பறிமுதல் செய்தது.

புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் (JKDNKA) வனவிலங்கு குற்றப் பிரிவு (WCB) தளபதி, சிறப்பு உதவி ஆணையர் (SAC) முகமது ஜாக்கி அஷார், அப்பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இந்தப் பறிமுதல்கள் நடந்ததாகக் கூறினார்.

கால்நடை சேவைகள் துறை (DVS), சுகாதார அமைச்சு (MOH), மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) உள்ளிட்ட பல்வேறு முகமைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கைமேற்கொள்ளப் பட்டதாக அவர் கூறினார். இதில் ஈடுபட்ட மற்ற முகமைகள் உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN), மலேசிய தனிமைப் படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை (MAQIS), மற்றும் மலேசிய அரச சுங்கத் துறை ஆகியவை ஆகும்.

“உறைந்த உணவுப் பொருட்களுடன், மூன்று எடை அளவிடும் கருவிகளையும், மூன்று ஒரு டன் எடை கொண்ட லாரிகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது. இதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 1.9 மில்லியன் ரிங்கிட் ஆகும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

Scroll to Top